#BREAKING: போதைப்பொருள் பரவலுக்கு மத்திய அரசே காரணம் – அமைச்சர் பொன்முடி

Default Image

குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள் இந்தியாவுக்குள் வருகின்றன என அமச்சர் பொன்முடி குற்றசாட்டு.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, போதைப்பொருட்கள் இந்த அளவுக்கு பரவியதற்கு மத்திய அரசு தான் காரணம். மத்திய அரசால் தான் போதை பொருள் அதிகரித்து வருகிறது. குஜராத்தில் தான் போதைப்பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. முத்ரா, விஜயவாடா துறைமுகங்களில் போதை பொருள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் போன்றவை அதிகளவில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு இதனை தடுக்க முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமுகங்கள் தனியார்மயமாக்கியதன் மூலம் இந்த போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால்தான் தமிழகத்தில் போதை பொருள் அதிக அளவு பரவி உள்ளது.

குஜராத் நீதிமன்றம் அறிவுறுத்தலுக்கு பிறகும் மத்திய அரசு போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை அதிகரித்துவிட்டு சென்ற அதிமுகவினர் தற்போது அதுகுறித்து பேசுகின்றனர். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட அபாரதத்துக்கு நிகராக திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் 950 டன் போதைப்பொருள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 152 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு எதிர்க்கட்சிகளும் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள் இந்தியாவுக்குள் வருகின்றன. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்.

தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் போதைப்பொருள் விற்பனை தொடர்கிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தி வருவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்