#Breaking: அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா – அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவு!

பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், இன்று காலை போக்குவரதுரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பேருந்துகளிலும் கேமரா பொருத்தப்படும் என்றும் பேருந்து வழித்தடங்களை மக்கள் அறிந்துகொள்ள சலோ ஆப்பை விரைந்து செயல்படுத்தவும் அமைச்சர் ஆணையிட்டுள்ளார். பெண்கள் கட்டணமின்றி செல்லக்கூடிய வகையில் நகர பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய அவர், போக்குவரத்துறையில் சீரமைக்கும் பணி ஏராளமாக உள்ளது என்றும் புதுமையான போக்குவற்துறையை செயல்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.