#Breaking:5,794 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா – மாநில தேர்தல் ஆணையம் முடிவு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,சென்னையில் 5,794 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி,ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையவுள்ளது.இதனால்,வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி வருவதால் இன்று வாக்குச்சாவடிகள் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,சென்னையில் 5,794 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக,பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 600 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.