அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 11-ல் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.
இந்த சமயத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலகம் உள்ளே நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் அலுவலகத்தில் என்னென்ன சேதமடைந்துள்ளது என ஈபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, அதிமுக அலுவலகம் வன்முறை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நேற்று சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் ஆஜராகி விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், 2வது முறை மீண்டும் அதிமுக அலுவலகம் சென்றுள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…