காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நிலவளம், நிலத்தடிநீர் வளம் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு இடையே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கான சட்டமசோதா இன்று நடக்கும் தமிழக சட்டபேரவையில் தாக்கலாகிறது என தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார்.
காவிரி டெல்டா மண்டலத்தில் உள்ள பகுதிகள்:
தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்கள் முழுவதும் காவிரி டெல்டா மண்டல பகுதிகள் எனவும், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி ஆகிய தொகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மனமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பகுடி ஆகிய தொகுதிகள் காவிரி டெல்டா மாண்டமாலாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…