#BREAKING: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு..!
விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தற்போதைய விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அத்தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் விஜயபாஸ்கர் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். திமுக வேட்பாளர் பழனியப்பன் தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.