ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணையை ரத்து செய்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் தெரிவித்துளைத்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடுகளை செய்திருப்பதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…