#BREAKING: ஈபிஎஸ்க்கு எதிரான வழக்கு ஆக.2 க்கு ஒத்திவைப்பு!

Default Image

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைகள் டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 2க்கு ஒத்திவைப்பு.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வில் விசாரணை தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைகள் டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 2க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராகப் பதவி வகித்தபோது எடப்பாடி பழனிசாமி தனது வேண்டியபட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியதன் மூலம் சுமார் ரூ.4,800 கோடி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, டெண்டர் முறைகேடு தொடர்பான இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இவ்வழக்கை விரைவில் விசாரிக்க கோரி தமிழக அரசு தரப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, சிபிஐ விசாரணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைகள் டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 2க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.

2018-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் வழக்கு, இன்று விசாரிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ் பாரதி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைத்து நீதிமன்றம். இந்த வழக்கு தொடர்பாக ஆர்எஸ் பாரதி தரப்பில் 3 வாரம் காலம் அவகாசம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் தலைமை நீதிபதி அந்தளவிற்கு அவகாசம் கொடுக்க முடியாது, ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்த வழக்கு நிச்சயமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்