தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் பதிலளிக்க சேனை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், தற்போதைய அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் வெற்றி பெற்றதை எதிர்த்தும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விராலிமலையில் வெற்றி பெற்றதை எதிர்த்தும், அதிமுக சார்பில் பெருந்துறையில் போட்டியிட்ட ஜெயக்குமார் என்பவரின் வெற்றியை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோரும் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்.6-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…