கடந்த சில வருடங்களுக்கு முன் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி, தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 13பேர் காவல்துரையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த நிறுவனத்தை மூடி நடவடிக்கை எடுத்த நிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது.
இந்த ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. வேதாந்த நிறுவனம் இந்த அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் இடைக்கால நிவாரணங்கள் எதுவும் இதுவரை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு வழங்கப்படாத நிலையில், இந்த மனுவில் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று 25 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், வேதாந்த நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதாந்த நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி உள்ளது. அடிப்படையான விதிமுறைகளை கூட வேதாந்தா நிறுவனம் பின்பற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…