இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள், கடந்த 2019-ம் ஆண்டு தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும், குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், புதிதாக விண்ணப்பம் செய்யவும், அந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர், மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்ற கிளையில், மத்திய அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். ஆகவே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நீதிபதிகள், தனி நீதிபதி மனுவை பரிசீலிக்குமாறே உத்தரவிட்டுள்ளார். ஒன்று மனுவை பரிசீலித்து குடியுரிமை வழங்குங்கள்; இல்லையெனில் நிராகரியுங்கள். அதற்க்கு ஏன் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, திருச்சி கொட்டப்பட்டு முகாம் அகதிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளது. ஆகவே, தமிழக அரசுக்கு இதுகுறித்து முடிவெடுக்குமாறு உத்தரவிடலாம் என தெரிவித்துள்ளார்.
அதற்கு நீதிபதிகள், தமிழக அரசின் முடிவாயினும், அது சட்டங்களுக்கு உட்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…