#BREAKING: அமைச்சரவையில் மாற்றமா? ஆளுநரை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஆளுநர் மாளிகை செல்கிறார் துரைமுருகன்.
தமிழக நீர்வளத்துறை துரைமுருகன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை செல்கிறார். திமுக அமைச்சரவையில்மாற்றங்கள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க உள்ளார் அமைச்சர் துரைமுருகன். அப்போது, தமிழக அரசின் அமைச்சரவை மாற்றம் குறித்த பேச போகிறார்களா? அல்லாது வேறு எதாவது குறித்து பேச உள்ளார்களா? என்பது குறித்து விவரம் வெளியாகவில்லை.