#BREAKING: அமைச்சரவை கூட்டம் 20 ஆம் தேதிக்கு மாற்றம்..!

Default Image

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 20ம் தேதி மாலை 6மணிக்கு நடைபெறுகிறது.

நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை (19- 11- 2021) மாலை 5.00 மணியளவில் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்படி மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பணித்துள்ளார்கள்.

இதன் காரணமாக நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு 20-11-2021, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

GO

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்