#BREAKING: இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது!
இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடந்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான புகார்கள், ஏற்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. பண விநியோகம் உள்ளிட்ட முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.