#BREAKING: இடைத்தேர்தல் – கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு!
டார்ச் லைட், குக்கர் சின்னங்களை சுயேட்சை வேட்பாளர்கள் கோரலாம் எனவும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பு.
இடைத்தேர்தலுக்காக சின்னம் ஒதுக்கும் பணி:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் . இளங்கோவனுக்கு கை சின்னம், தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், டார்ச் லைட், குக்கர் சின்னங்கள் சுயேச்சைகளுக்கான சின்னம் பட்டியலில் உள்ளது. டார்ச் லைட், குக்கர் சின்னங்களை சுயேட்சை வேட்பாளர்கள் கோரலாம் எனவும் தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார். இதில், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே.பி.எம்.ராஜாவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
குக்கர் சின்னம் இல்லாததால் அமமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது. தற்போது, டார்ச் லைட், குக்கர் சின்னங்கள் சுயேச்சைகளுக்கான சின்னம் பட்டியலில் உள்ளது. மேலும், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மற்ற கட்சிகளுக்கு என்னென்ன சின்னங்கள் ஒதுக்கப்படுகிறது என விரைவில் வெளியாகும் குறிப்பிடத்தக்கது.