நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பட்டன் வசதி கூடிய 500 பேருந்துகளின் சேவை தொடக்கம்.
நிர்பயா பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் மாநகர போக்குக்குவரது கழகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதியுடன் கூடிய 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மொத்தம் 2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்ட 500 பேருந்துகளின் சேவை தொடங்கியுள்ளது. பேருந்தில் பயணிக்கும் போது எதாவது பிரச்சனை என்றால், அவசர அழைப்பு பொத்தானை அழுத்தினால், நேரடியாக கட்டுப்பாடு அறையில் ஒலி எழுப்பும், இதன் மூலம் பெண்களுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ பிரச்சனை என்றால், அருகில் இருக்கும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவர்கள் உதவி புரிவார்கள் என்பதாகும்.
பாதுகாப்பு வசதியுடன் பேருந்து சேவை தொடக்க நிகழ்வில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், இந்த நிகழ்வின் போது, 136 போக்குவரத்து பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…