அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4-ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பொதுப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டு உள்ளதால் சென்னை சென்ட்ரல் பேருந்து பணிமனையில் போக்குவரத்துறை அமைச்சர் எம் .ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை அரசு பேருந்துகள் இயக்கப்படும், அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மாவட்டம் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், மார்ச் மாதம் எடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய்க்கான எனவும் மாதாந்திர பேருந்து பயணச்சீட்டு புதிதாக கொடுக்க தொடங்கி விட்டோம் என தெரிவித்தார். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அறிகுறிகள் இருந்தால் மட்டுமே ஓட்டுனர், நடத்துனர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறுவது தவறு, அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என கூறினார்.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…