#Breaking : டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்
தமிழகத்தில் 2019 மற்றும் 2020 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தமிழக அரசுக்கு அதிக வருவாயை அரசு டாஸ்மாக் கடைகள் தான் ஈட்டித் தருகிறது .இந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று பொதுமக்களால் போராட்டங்கள் இன்றளவும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது.நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இனிமேல் பீரின் விலை ரூ.10, ஒரு ஆஃப் விலை ரூ.20க்கு,ஒரு குவார்ட்டரின் விலை ரூ.10, ஒரு ஃபுல் விலை ரூ.40 என்று உயர்த்தப்பட்டது.கடந்த 2014 ஆண்டுக்குப் பின் சரியாக 6 வருடத்திற்கு பிறகு தற்போதுதான் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் 2019 மற்றும் 2020 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாய் உள்ளிட்ட மத்திய அரசிடம் இருந்து ரூ.12263 கோடி தமிழகத்துக்கு வரவேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.