#BREAKING: மின்னணு முறையில் பட்ஜெட் தாக்கல்..?- சபாநாயகர் அப்பாவு ..!
மின்னணு முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனைசெய்து வருவதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டப்பேரவை விதிகள் குழுவின் முதல் கூட்டத்திற்கு பின் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டமன்றப் பேரவையில் காகிதம் இல்லாத பட்ஜெட்டைதாக்கல் செய்யலாமா..? அதற்கு வேண்டிய சாத்தியக்கூறுகள் என்ன..? அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டமன்றத்தில் அவர்களுக்கு முன் டச் ஸ்கிரீன் வைக்கலாமா..?
அதேபோல ஒவ்வொரு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கையில் டேப்லெட் கொடுக்கவும், மேலும் ஒரு கணினி அவர்களுக்கு கொடுத்து தொகுதிகளுக்கு வரக்கூடிய கோரிக்கை மனுக்களை மெயில் ஐடி மூலம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புகின்ற அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுக்கலாமா..? என முதல்வர் அறிவுறுத்தலின்படி ஆலோசிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
பட்ஜெட் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும் என தெரிவித்தார். நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.