மக்களுக்கு பயன் அளிக்கும் எனில் புதிய யுக்திகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தல்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் நாளான நேற்று 19 அரசு துறைகளின் செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 2-வது நாளான இன்றும் 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அறிவிப்புகள் நிலை, செயல்பாடு, தாமதத்திற்கான காரணம் குறித்து ஆலோசனை மேகொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், துறை செயலாளர்களுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், மக்களுக்கு பயன் அளிக்கும் புதிய யுக்திகள் எங்கிருந்தாலும், அதை நம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயலாக்கம் பெற்றிருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
புதிய தொழில்கள் தொடங்குவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அவை களையப்பட வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற குடிநீர் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசின் அறிவிப்புகள் கடைக்கோடி மக்களுக்கும் போய் சென்றடைய செயலாக்க வடிவம் தர வேண்டும் என்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை வழங்கினார். இதன்பின் திட்டங்கள் அமலாக்கம் குறித்து 19 துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் 2 நாட்கள் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…