காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரை பள்ளியில் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உள்ள பள்ளியில் தொடங்கி வைக்கிறார். அதன்படி, தமிழகம் முழுவதும் 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
சென்னை உள்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவர்களுக்கும், 23 நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் 17,427 மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள 26 தொடக்க பள்ளிகளில் 4,388 மாணவர்கள் பயனடையும் வகையில் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக ரூ.33.56 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…