#Breaking:ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடக்கம் – லிங்க் இங்கே!

Published by
Edison

மதுரை:ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை,மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு முன்னதாக அரசாணையை வெளியிட்டது.

இந்நிலையில்,மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை,மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது.அதன்படி,ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் நபர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே,ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,

  • காளையுடன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என 2 பேருக்கு மட்டுமே அனுமதி. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், 2 நாட்களுக்கு முன்பு பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • 2 நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
  • காளைகளை பதிவு செய்யும் பொழுது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும்.
  • ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்கள் முன்பாக பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
  • அடையான அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
  • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
  • எருது விடும் நிழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
  • 150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50% என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • அனைத்து துறை அலுவலர்களும்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும். பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
  • வெளியூரில் வசிப்பவர்கள்,ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது.
  • தமிழகத்தில் கொரோனா பரவல் மத்தியில் ஜல்லிக்கட்டு பூட்டி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்த நிலையில்,பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

11 hours ago