#BREAKING: அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது.!
வரும் 7ம் தேதி தொடங்கவுள்ள மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு சற்றுமுன் தொடக்கம்.
தமிழக முதல்வர் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீக்கப்படுகிறது என்று அறிவித்தார். இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது, இதில், குறிப்பாக மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை தொடங்கியது. சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், வரும் 7ம் தேதி தொடங்கவுள்ள மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு சற்றுமுன் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் மும்மரம் காட்டி வருகின்றனர்.