#BREAKING: தமிழக மீனவர்களின் உடல் இலங்கையில் பிரேத பரிசோதனை.!

Default Image

இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் உயிரிழந்ததாக கூறப்படும் 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை.

கடந்த 18-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றனர். இலங்கை கடற்படையால் தான் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று அவர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆகவே, உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை இந்தியாவில் தான் நடக்க வேண்டும் என்றும் அவ்வாறு நடந்தால் மட்டுமே மீனவர்கள் எந்த காரணத்தால் உயிரிழந்தார்கள் என உண்மையை கண்டறிய முடியும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் உயிரிழந்ததாக கூறப்படும் 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் நான்கு தமிழக மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இன்று இரவு காங்கேசன் துறை கடற்படை முகாமில் ஒப்படைக்கப்படும் என்றும் மீனவர்கள் உடல்கள் நாளை தமிழகம் கொண்டுவரப்படும் எனவும் தகவல் கூறப்படுகிறது. ஆனால் இதுக்குறித்து இந்திய தரப்பில் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்