மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசர் தொழில்நுட்பத்துடன் ஒளியூட்டப்படும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினை மறுசீரமைக்க திட்ட ஆலோசகரின் அறிக்கை பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வண்ணம் சுற்றுலா விருது வழங்கப்படும் என்றும், சென்னை மெரினா கடற்கரையில், ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும். ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் படகு சேவை தொடங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். ஜவ்வாது மலை பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…