அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் அவர்கள், ‘நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்பதால் வெளிநடப்பு செய்தேன். சமூக நீதிக்கு எதிராக நீட் இல்லை. இடஒதுக்கீடு பாதிக்கப்படுவதாக கூறுவதும் உண்மைக்குப் புறம்பானது. நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு பாதிக்கப்படவில்லை என்றும், நீட் தேர்வால் எள் முனையளவு கூட பாதிப்பு இல்லை, நீட் தேர்வு 10 மொழிகளில் நடைபெறுவதால் பல மணிலா மாணவர்கள் பயனடைந்து வருகின்ற்னர் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…