#BREAKING: பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது.. இருவரும் கைது செய்யப்பட வேண்டும் – திமுக
இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது என திமுக அறிக்கை.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவரை தொடர்ந்து, பாஜகவின் நவீன் குமார் ஜிண்டாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இவர், நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேசும் வகையில் இவர் ட்விட் செய்ததாகவும், நபிகளை குறித்து விமர்சனம் செய்து அவர் ட்விட் செய்து இருந்ததாகவும், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
இருப்புனும், நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், பாஜக செய்தித்தொடர்பாளர்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும், இவர்களுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்க கூடாது என்று திமுக சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவுச் செயலாளர் மஸ்தான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அண்ணல் நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்த பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும். பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிப்பவை. அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது என்றும் சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என்பதை தி.மு.க. சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவு வலியுறுத்துகிறது எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை வைத்துள்ளார்.
“கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்க கூடாது”
– கழகச் சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவுச் செயலாளர் டாக்டர் @DrDMasthan1 அவர்கள் அறிக்கை.#DMK pic.twitter.com/Si6glxhMg7
— DMK (@arivalayam) June 7, 2022