#BREAKING: அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக ஆலோசனை..!

தொகுதி பங்கீடு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக அதிக இடங்களை பெற தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நேற்று இரவு 3 மணிநேரம் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உடன் முதல்வர், துணை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அப்போது உடன்பாடு எட்டப்படாத நிலையில், பாஜக நிர்வாகிகள் 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக சார்பில் 30 தொகுதிகள் கேட்கபட்டதாகவும், ஆனால் அதிமுக சார்பில் 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025