#BREAKING: துணைவேந்தர்களை அரசே நியமிக்க சட்ட மசோதா? – பேரவையில் தாக்கல் செய்யும் அமைச்சர்!

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதாவை பேரவையில் தாக்கல் செய்ய திட்டம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனம், சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைப்பெறுகிறது. இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேர்ந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து வரக்கூடிய சூழ்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதாவை பேரவையில் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் நிறைவுபெற்ற பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் பெரியார், அண்ணா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளது. இதற்கான துணைவேந்தர்கள் இதுவரை ஆளுநர் தான் ஒரு கமிட்டி கூட்டம் கூட்டி துணைவேந்தர்களை நியமனம் செய்வார்கள்.
இந்த நிலையில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்ய உள்ளனர். இதனிடையே, இன்றைக்கு ஊட்டியில் தமிழக ஆளுநர், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், முக்கியமான சட்டமசோதா தாக்கலாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று மசோதா மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025