#BREAKING: மெரினாவில் பைக் ரேஸ் – 5 பேர் கைது!

Default Image

மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் பைக் ரெஸ் செய்த 5 பேர் கைது.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தின் பைக் ரெஸ் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரஹ்மதுல்லா, கல்லூரி மாணவர் முகமது சாதிக், ஆஷிக் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பைக் ரெஸ் செய்த 5 பேரையும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையர் ஜவஹர் பீட்டர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடம் இருந்தும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் அருகே 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதி சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் ரேஸில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்தததுடன், அவர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினர். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதே நேரத்தில் அப்பகுதியில் சென்ற சமூக ஆர்வலர் ஒருவர் இளைஞர்கள் ரேஸில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்கள் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக 4 உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டனர். அதனடிப்படையில், சென்னை காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் பைக் ரெஸ் செய்த 5 பேரை கைது காவல்துறை கைது செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்