சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு அரசு அனுமதி.
சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா நேற்று தொடங்கியது. இந்த உணவு திருவிழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த திருவிழாவானது, 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. சிக்கன் மட்டன் பிரியாணிக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பீஃப் பிரியாணிக்கு அரங்கு இல்லையே ? என கேள்விகள் எழுப்பப்பட்டது.
பீஃப் பிரியாணிக்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் பீப் அரங்கு அமைக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். சென்னை பீஃப் பிரியாணிக்கு தனி அரங்கு அமைக்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீஃப் பிரியாணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், இன்று முதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளது. 3 பீப் பிரியாணி கடைகள் கேட்டுக் கொண்டதால் அனுமதி என தகவல் கூறப்படுகிறது.
அரங்கு அமைக்க விருப்பம் தெரிவித்தால், பீஃப் உணவு விற்க அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சூரிய நிலையில், பீஃப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை உணவு திருவிழாவுக்கு சென்று பீப் பிரியாணி விற்பனையை பார்வையிட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…