#BREAKING: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் – மாநகராட்சி எச்சரிக்கை
கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை என மாநகராட்சி எச்சரிக்கை.
கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பராமரிக்கப்படும் 3 இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலை, மாலை என இரு வேளைகளில் கடற்கரையில் ஆய்வு நடத்தப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடற்கரைகளில் இரு வேளை ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.