#BREAKING: ஆன்லைன் வகுப்புகள் தடைவிதிக்க -உயர்நீதிமன்றம் மறுப்பு.!
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க கோரி சரண்யா தொடர்ந்த வழக்கை ஜூன் 20-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் வகுப்புகள் வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றும், ஏழை மாணவர்களுக்கு சாத்தியம் இல்லை என பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவரின் தாய் சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவர் மனுவில்,ஆன்லைன் வகுப்பால் மாணவர்கள் ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடும். மேலும், ஏழை , வசதிபடைத்த மாணவர்களுக்கு இடையில் சமமற்ற நிலை உருவாகும் என கூறி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து. மேலும், பாதுகாப்பான ஆன்லைன் கல்விக்கு என்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
இதையடுத்து, சரண்யா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் ஜூன் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.