#Breaking:மோசமான வானிலை – 8 விமானங்கள் ரத்து..!
சென்னை:மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை புரியும் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்தது.
மேலும்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மாலை காரைக்கால் ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதனால்,சென்னைக்கு இன்றும்,நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னையில் கனமழை பெய்து வருவதால் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை புரியும் 8 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மழை மற்றும் மேகமூட்டத்தால் பார்வை முழுமையாக தெரியாத காரணத்தால் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 4 விமானங்களும் மற்றும் மதுரை,திருச்சி,மும்பை மற்றும் ஷார்ஜாவில் இருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.