#BREAKING: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி – உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு!

Default Image

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் உள்ளிட்ட உணவு வகைகளை சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உணவு செலவுக்கான மானியத்தில் மாற்றம் இல்லாமல் உணவு வகைகளை மாற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தோசை, இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகளும் சேர்க்கப்பட்டு, தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. ஏற்கனவே, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் வழங்கப்பட்டு வந்த நிலையில், தோசை தேங்காய்ப்பாலுடன் இடியாப்பம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவ/ மாணவியருக்கும், கல்லூரி/ஐடிஐ மற்றும் பள்ளி விடுதிகள் என தனித்தனியே வகைப்படுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விடுதி மாணவ/மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணத்தில் மாற்றம் இல்லாமல் புதிதாக உணவுப் பட்டியல் தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கல்லூரி/பள்ளி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ/ மாணவியருக்கு Institute of Management Catering Technology and Applied Nutrition பரிந்துரைத்துள்ள பட்டியலின் அடிப்படையில், காலை, மதியம், இரவு, சிறப்பு உணவு மற்றும் மாலை சிற்றுண்டி ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி மாதாந்திர உணவுக் கட்டணத்தில் மாற்றம் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்