அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்துவதற்கான தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை பின்பற்றி அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அயோத்தியா மண்டப நிர்வாகத்திற்கு எதிரான குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தலாம். குற்றசாட்டு குறித்த ஆதாரங்களை வழங்கி, சாட்சியங்களை விசாரித்து ஆட்சேபங்களை பதிவு செய்து விசாரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அயோத்தியா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. இந்த மண்டபத்தில் தினசரி பூஜை நடைபெறுகிறது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு முறையான கணக்குகள் இல்லை என்று ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பின் செயலாளர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் 2013-ஆம் ஆண்டு அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்து, அறநிலையத்துறை வசம் ஒப்படைத்தது.
இந்த உத்தரவை எதிர்த்து 2013-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், கடந்த மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்துக்கொண்டது சரியானது தான் என்று உத்தரவிட்டார். இதன்பின் தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜ் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் விரிவான உத்தரவை நாளை காலை பிறப்பிக்கிறது நீதிமன்றம்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…