சென்னை:அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராமசமாஜ் என்ற அமைப்பு நடத்தக்கூடிய அயோத்தியா மண்டபம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது.இதற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ராமசமாஜ் அமைப்பால் வழக்கும் தொடுக்கப்பட்டது.அந்த வழக்கில்,அயோத்தியா மண்டபம் இனி அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும்,வேறு எந்த தனிப்பட்ட அமைப்புகளும் இதில் தலையிட முடியாது எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,இதனை எதிர்த்து தொடரப்பட்ட்ட மேல்முறையீடு வழக்கில்,சென்னையில் உள்ள அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கும்,அறநிலையத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து,பக்தர்கள் தொடர்ந்து அயோத்தியா மண்டபத்திற்கு சென்று வழிபட அனுமதிக்கப்படும் என்றும்,அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளியை தொடர்ந்து நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.இதனையடுத்து,இந்த வழக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி இறுதி விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…