#Breaking:மேலும் 8 மீனவர்கள் மீது தாக்குதல்;இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!

Published by
Edison

நாகை:வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.

நாகை மாவட்டம் கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இன்று காலை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம்,நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கினர்.

ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றதாகவும் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, காயமடைந்த 3 பெரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில்,நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.அதன்படி,4 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாட்டுப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களை தாக்கியுள்ளனர்.

மேலும்,மீன்பிடி வலைகள்,ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு விரட்டியடித்ததாகவும் மீனவர்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Recent Posts

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

30 minutes ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

1 hour ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

2 hours ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

10 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

13 hours ago