#BREAKING : அதிமுகவை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த இயலாது – ஓபிஎஸ்

Default Image

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்றும், கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் வீடுகள் முன்பதாக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கடந்த 23-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் சசிகலா ஆடியோ தொடர்பான கேள்விகள்  எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான்கரை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் அதிமுகவை வழிநடத்தி வருகிறோம். அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்றும், கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்