#BREAKING : பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!

பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் , நாகராஜன் “பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி”என்ற தடகள பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். தடகள பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு கைது செய்து செய்தனர். இந்நிலையில்,சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நாகராஜன் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.