#Breaking:இலங்கைக்கு உதவி;மனிதாபிமான செயல் – முதல்வர் ஸ்டாலின் நன்றி!
இலங்கையில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வு,உயிர்காக்கும் மருந்துகள்,எரிபொருள் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த சூழலில்,இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடரை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது எனவும்,
இந்திய தூதரகம் வழியாக தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும் என்பதால் தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்து தரக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
அதோடு நிற்காமல்,இந்த தீர்மானம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.அந்த அக்கடிதத்தில், இலங்கைக்கு தமிழகத்திலிருந்து உதவிப் பொருட்களை அனுப்ப உரிய அனுமதி அளிக்க, வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.அதன்பின்னர்,வெளியுறவுச் செயலர்,தமிழ்நாடு தலைமைச் செயலாளரிடம் பேசி,கடந்த 16 ஏப்ரல் 2022 அன்று, மனிதாபிமான ஆதரவிற்கு அரசு திறந்திருக்கும் என்று எடுத்துரைத்தார்.
இந்நிலையில்,இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றதற்காக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நன்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் தனது நன்றி கடிதத்தில் கூறியுள்ளதாவது:”இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி.இந்த மனிதாபிமான செயல் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் மற்றும் நாடுகளுக்கு இடையே அரவணைப்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
A personal thanks to Hon’ble @DrSJaishankar for accepting TN’s request to help the people of SL. Am sure that this humane gesture will be greatly welcomed by all and help to improve the warmth and cordiality between nations. Let the goodwill grow in all spheres. pic.twitter.com/AKgLnfXVmo
— M.K.Stalin (@mkstalin) May 2, 2022