அசானி புயல் 24 மணிநேரத்தில் தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் மழை தொடரும் என்றும் ஆந்திரா அருகே வங்கக்கடலில் நிலவும் அசானி புயல் 24 மணிநேரத்தில் தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறியுள்ளது. தற்போது ஆந்திராவுக்கு அருகே மத்திய மேற்கு வங்கக்கடலில் அசானி புயல் நிலவி வருகிறது. இந்த புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்று தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…