பொறியியல் பாடத்திட்ட மாற்றம் போல, கலை அறிவியல் பாடத்திட்டமும் மாற்றப்படும் என அமைச்சர் தகவல்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதற்காக 90 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாநாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 68 பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாட்டில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் பாடத்திட்ட மாற்றம் போல, கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றப்படும் அறிவித்துள்ளார்.
பொறியியல் முதலாமாண்டு, 2-ஆம் ஆண்டுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டதுபோல் மூன்றாம் ஆண்டுக்கும் புதிய பாடத்திட்டம் வரும். முன்பிருந்த பாடத்திட்டத்திற்கு பதில் தற்போதைய காலத்திற்கு ஏற்ப பாட திட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும். நான் முதல்வன் திட்டத்தில் என்ன மாதிரியான பாடத்திட்டம் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், கல்லூரி பேராசிரியர்கள் அவற்றை தெரிந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…