பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாக பின்பற்றவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதாடி வருகிறார். அப்போது, இருபதவிகளும் காலியாக இருந்தால் பொதுக்குழுவை கூட்ட யாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம். தேர்தல் விதிகள் திருத்தத்துக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிடில் இரு பதவிகளும் காலியாகிவிடும். தேர்தலுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இருவர் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு என்றும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் பொதுக்குழுவை கூட முடியும் எனவும் என ஓபிஎஸ் தரப்பில் பதிலளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவை கூட்டியதில் கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். தொண்டர்கள், நிர்வாகிகளின் கோரிக்கையால் பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டது என்றும் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது கட்சி விதிகளுக்கு விரோதமானது எனவும் ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.
பொதுக்குழு விதிகளை பின்பற்றி நடத்தப்பட்டதா? என்பது குறித்து வாதங்களை முன்வையுங்கள் என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை. 2 பதவிகளும் காலாவதியாகிவிட்டால், பொதுக்குழு உறுப்பினர்களின் பதவியும் காலாவதியாகும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு முக்கிய வாதங்களை முன்வைத்து வரும் நிலையில், பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாக பின்பற்றவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…