#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் – தமிழக அரசு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பார்வையாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 33 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு #tngovt #LocalBodyElection #Election2022 pic.twitter.com/bctZGGFl45
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) January 29, 2022