சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல்,மதவாத நச்சு விதைகளைத் தூவிட முயற்சி அபாயகர சக்திகள்,அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளிடமிருந்து தமிழகத்தை சேதாரமின்றி பாதுகாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்,அபாயகரமான சக்திகளை அடையாளம் காட்டிடும் வகையில் தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.மேலும்,சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் கருணாநிதி அவர்களின் சிலை திறக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும், தேச விரோத சக்திகளிடமிருந்து தமிழகத்தை பாதுகாப்போம் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.மேலும்,உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…