#BREAKING: நீட் தேர்வால் இன்று மேலும் ஓரு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை..!

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதுள்ளனர்.
இந்நிலையில், நாளை நீட் எழுதவிருந்த தருமபுரி செந்தில்நகர் பகுதியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இரண்டாம் முறை விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆதித்யா தாய் சேலத்துக்கு சென்று இருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவன் விபரீத முடிவு எடுத்துள்ளார். ஏற்கனவே மதுரையை சார்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025