#BREAKING : கோடநாடு வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரிடம் விசாரணை…!

Published by
லீனா

உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 38-வது அரசுத்தரப்பு சாட்சியாக இருக்கும் அனிஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி, நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையை தனிப்படை காவல்துறையினர்  உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து நடத்தி வருகின்றனர். ஷாஜியை பொறுத்தவரையில் அரசுத்தரப்பு வழக்கில் 36-வது சாட்சியாக இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது, உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 38-வது அரசுத்தரப்பு சாட்சியாக இருக்கும் அனிஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அனிஷிடமும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

52 minutes ago

திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?

டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…

1 hour ago

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

2 hours ago

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…

2 hours ago

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…

3 hours ago

மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

3 hours ago