அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதுரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து,தாக்கப்பட்ட திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின்னர், மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதுரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் ஆகியோர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…