#Breaking: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் – ஜெ.பி.நட்டா அறிவிப்பு

Default Image

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து புதிய தலைவராக அண்ணாமலை நியமனம்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து, அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரில் ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை 10 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்